வெற்றிமாறன் இயக்கத்தில் மிஸ் ஆன கிரிக்கெட் படம்.. மீண்டும் உருவாகுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 23 2023]

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த கிரிக்கெட் படம் ஒன்று மிஸ் ஆகிவிட்டதாகவும் ஆனால் இந்த படம் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் இருந்து அவருடைய பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் ஜிவி பிரகாஷ். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படம் தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக நின்றுவிட்டது என்றும் ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

வெற்றிமாறன் தற்போது சில வருடங்கள் பிஸியாக இருப்பதால் அதற்கு பின்னர் இந்த படம் மீண்டும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நிச்சயம் ஒரு நாள் நடிப்பேன் என்றும் ஜிவி பிரகாஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிரிக்கெட் படம் வெளியானால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.