ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவால் இழந்தேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவால் இழந்தேன் என பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’குசேலன்’. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருப்பார் என்பதும் பசுபதி மற்றும் மீனா மட்டுமே முக்கிய கேரக்டர்கலில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் நடிகை மம்தா மோகன்தாசும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார். ஆனால் இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின் தேவையில்லை என்று நயன்தாரா பட குழுவினர்களிடம் கூறியதால் தான் நான் அந்த படத்தில் நீக்கப்பட்டேன் என நடிகை ம்ந்தா மோகன் தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதேபோல் அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ திரைப்படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது என்றும் ஆனால் தெலுங்கு திரை உலகிற்கு நான் புதிது என்பதால் அந்த படத்தில் நடிக்க நான் பயந்தேன் என்றும் ஒரு அருமையான படத்தை மிஸ் செய்து விட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

காஷ்மீர் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்திய த்ரிஷா.. என்ன செய்திருக்கின்றார் பாருங்கள்..!

நடிகை த்ரிஷா தற்போது காஷ்மீரில் விஜய்யின் 'லியோ' படத்தின் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்

உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் சக்தி இது ஒன்று தான்; லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் லேட்டஸ்ட் பதிவு

 உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் சக்தி இது ஒன்றுதான் என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. 

மாஸ் வீடியோவுடன் வெளியான 'மாவீரன்' அப்டேட்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது

எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அவர் தனி கட்சி தொடங்குவார் என்றும் 2021 ஆம் ஆண்டு

ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷின் 'வாத்தி' எந்த ஓடிடியில் ரிலீஸ்? தேதி அறிவிப்பு..!

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும்