close
Choose your channels

19 வயதிலேயே எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்தது.. பிக்பாஸ் நடிகையின் பகீர் குற்றச்சாட்டு..!

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

19 வயதிலேயே தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள பல நடிகைகள் அவ்வப்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக பேட்டி அளித்திருக்கிறார்கள் என்பதும் இந்த விவகாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருந்து வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் காதலி என்று கூறப்படும் அங்கீதா என்பவர் தான் 19 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை சந்தித்ததாக தெரிவித்தார்

19 வயதில் ஒரு திரைப்படத்திற்கு நாயகி தேவை என்ற கேள்விப்பட்டு ஆடிஷன் சென்றபோது என்னை தனியாக அழைத்த ஒருவர், ‘நீங்கள் தான் இந்த படத்திற்கு நாயகி, அதிக சம்பளம் கொடுப்போம், ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

19 வயது பெண்ணிடம் இப்படி கேட்பது அசிங்கமாக இல்லையா என்று நான் கேட்டபோது அவர்கள் பதில் சொல்லவில்லை, உங்களுக்கு திறமையான நடிகை தேவை இல்லை, படுப்பதற்கு ஒரு பொண்ணு தான் வேண்டும் என்றால் அதற்கு நான் ஆள் இல்லை என்று அவர்களை திட்டி விட்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்

அதன் பிறகு அவர் பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும், பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் ஆக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை அங்கிதா, ‘கங்கனா ரனாவத் ’மணிகர்ணிகா’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பதும், ளும் அதன் பின் சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பெரும்பாலும் டிவி சீரியல் தான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment