இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்: விஜய் ரசிகருக்கு மாளவிகா மோகனன் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த மாஸ்டர்' படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த பதிவில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.
இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்த்தை தெரிவித்ததோடு "ஒரு கற்பனையான பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில் மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் நான் புத்தகம் அதிகம் படிப்பேன் என்று எப்படி தெரிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த டுவிட்டிற்கு அவரை வசைபாடிய அதே விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
I love this version! ?? And how did you know I love reading?! ??♥️ #masterquarantine #masterteamquarantine https://t.co/uE6gJReBo4
— malavika mohanan (@MalavikaM_) April 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments