நடிப்பின் ஆழத்தை விஜய்யிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். 'களம்' நாயகன் ஸ்ரீனி
- IndiaGlitz, [Tuesday,April 26 2016]
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீனி அதன்பின்னர் மதராசப்பட்டினம், வேலூர் மாவட்டம், தாண்டவம் மற்றும் தலைவா போன்ற படங்களில் நடித்தார். மேலும் இவர் பி. வாசு, ஜான் மகேந்திரன் (சச்சின்) மற்றும் தாம் தூம் புகழ் ஜீவா ஆகியோரிடம் உதவியாளராகவும் பணிபுரிந்ததுள்ளார். இந்நிலையில் தற்போது 'களம்' என்னும் திகில் படத்தில் நாயகனாக புரமோஷன் பெற்றுள்ளார்.
இந்த படம் குறித்து ஸ்ரீனி கூறியபோது, "களம் திரைப்படத்தின் கதையை கேட்டவுடனே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையம்சம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் நம்பகத்தன்மையாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் எதார்த்தமாகதான் நடித்துள்ளேன். இந்த படத்தின் எனக்கு அகோரி வேடம். இந்த படத்தில் என்னுடைய நடிப்பு சிறப்பாக அமைய, நான் உதவி இயக்குனராக இருந்த அனுபவமும் எனக்கு உதவியது' என்று கூறியுள்ளார். மேலும் தலைவா படத்தில் நடிக்கும்போதுதான் விஜய்யுடன் நெருக்கமாக பழக முடிந்ததாகவும் அந்த படத்தில் நடித்தபோது எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் நடிப்பின் ஆழம் என்ன என்பதையும் விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.,
ராபர்ட் ராஜ் இயக்கும் 'களம்' திரைப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவும் பிரகாஷ் நிக்கி இசையமைக்கவும் செய்கின்றனர். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் மதன் தயாரிக்கும் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.