AAA ஓடாது என்று எனக்கு முன்பே தெரியும: ஆதிக் ரவிச்சந்திரன்

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

சிம்புவின் திரையுலக வாழ்வில் மோசமான தோல்வியை பெற்ற படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படமாகத்தான் இருக்கும். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை

இந்த நிலையில் AAA படம் சரியாக போகாது என்று தனக்கு முன்பே தெரியும் என்றும், அந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்த பாடங்களை கற்று கொண்டதாகவும், இனிமேலும் அந்த தவறு நடைபெறாது என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கின்றார். நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

தனக்கு சோதனையான காலகட்டத்தில் தனது ஆறுதல் கூறிய ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய தெய்வ மச்சான்' என்றும் ஆதிக் கூறினார்.