விஜய்க்கு நான் தான் உதவி செய்தேன்: மைக் மோகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன் ஆக இருந்தவர் நடிகர் மைக் மோகன். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை, இளமைக்காலங்கள், உதயகீதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி உள்பட பல திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த பல ஆண்டுகளாக இவர் திரையுலகில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல கதை தற்போது அமைந்துள்ளதாகவும் அந்தப் படத்தில்தான் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அடுத்து தனது ரசிகர்களை தொடர்ந்து சந்தோசப்படுத்த தான் முடிவு செய்திருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் மோகன் கூறியுள்ளார்
மேலும் நான் முதலில் எனது காஸ்ட்யூம் டிசைனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் எனது திரைப்படங்களில் என்னை அழகாக காண்பிக்கும் வகையில் காஸ்ட்யூம் அமைத்தவர் எனது காஸ்ட்யூம் டிசைனர் ராஜேந்திரன் தான் என்றும் அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்வதாகவும் கூறினார்
மேலும் என்னுடைய படங்களை பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனரை அவருக்கு கேட்டார் என்றும், விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைனரை நான் தான் அறிமுகம் செய்து உதவி செய்ததாகவும் நடிகர் மோகன் தனது மலரும் நினைவுகளில் ஒன்றை பகிர்ந்து கொண்டார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments