விஜய்யை நான் ஒரு பேரரசராக பார்த்தேன்: காமன்டிபி டிசைனர் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

தளபதி விஜய்யை நான் ஒரு பேரரசனாக பார்த்தேன் என்று விஜய்யின் பிறந்தநாள் காமன்டிபியை டிசைன் செய்த டிசைனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் சமூகவலைதளத்தில் காமன்டிபி வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஷைனு மாஷ் என்பவர் விஜய் பிறந்தநாள் காமன் டிபியை டிசைன் செய்துள்ளார். இந்த காமன் டிபியை முடிக்க அவர் நாற்பது நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் மே மாதம் தொடங்கிய இந்த காமன் டிபியை ஜூன் 10ஆம் தேதி தான் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காமன் டிபி குறித்த ஐடியா குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘பிகில் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் ’அரசன் நானோ’ என்ற வரிகளைக் கேட்டவுடன் தனக்கு இந்த ஐடியா வந்ததாகவும் அவரை ஏன் ஒரு பேரரசனாக காண்பிக்கக் கூடாது என்று தான் முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் அரசனாக அவரை காண்பித்தால் என்ன என்று என் மனதுக்குள் உருவான கற்பனை தான் இந்த காமன் டிபி என்று அவர் கூறினார்.

மேலும் அவர் இந்த காமன் டிபியில் ரசிகர்களை தளபதியின் சிப்பாய்களாக உருவகம் செய்ததாகவும், ’ரசிகர்களோடு கைகோர்த்து தளபதி போறாரு’ என்ற வகையில் இந்த காமன் டிபியை தான் உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ’கோமாளி’ உள்பட பல திரைப்படங்களுக்கு டிசைனராக பணி செய்துள்ள இவர் சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் டிசைன் செய்த விஜய்யின் காமன் டிபியை 21 பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள் என்பதும் அந்த காமன் டிபி இரண்டு நாட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது