close
Choose your channels

என்னுடன் ரஜினி மோதமாட்டார் என்று நினைக்கிறேன்: அமீர்கான் நம்பிக்கை

Friday, March 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 26 உள்பட பல தேதிகள் அறிவிக்கப்பட்டும், இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை. வரும் தீபாவளிக்கு '2.0' வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் நடித்து வரும் Thugs of Hindostan என்ற திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று தெரிவித்தார்

அப்போது ஒரு ரசிகர், ரஜினியின் 2.0' படமும் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர்கான், '2.0' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது எனக்கு தெரியவில்லை. ஷங்கர் இயக்கிய மிகப்பெரிய படம் அது. நான் பார்க்க வேண்டும் என்று விரும்பிய படம். என் படத்துடன் அந்த படம் மோதாது என்று நினைக்கின்றேன். ஒருவேளை மோதினால் எங்களுக்குத்தான் பிரச்ச்னை. ரஜினிகாந்த் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார், நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என்று அமீர்கான் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment