ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர் தற்போது அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக பல ஆண்டுகள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இவர் பின்பு சறுக்கிறார் என இந்திய அணியில் இருந்து விலக்கப் பட்டார். பின்பு ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரஞ்சிப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து இருந்தாலும் மீண்டும் என்னால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். “நீங்கள் ஒன்றை இழக்கும்போது அதில் பல மாற்றங்கள் உருவாகும். அணியில் ஏராளமான அதிரடி நீக்கம் மற்றும் மாற்றம் ஆகியவை நடைபெற்றது. நான் சிறப்பாக விளையாடவில்லை. அது மற்றவருக்கு வழிவகுத்தது. நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சிறந்த வீரராக மாறினேன். ஆனால் அதன்பின் வருடத்துக்கு வருடம் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தேன். ஆனால் ஒருபோதும் இந்திய அணியில் மீண்டும் என்னால் இடம்பிடிக்க முடியவில்லை.
முப்பது வயதை எட்டும்போது சற்று ஏமாற்றம் அடைந்தேன். அதிக அளவில் முதிர்ச்சி அடைந்து என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டேன. இந்திய அணிக்காக மீண்டும் அழைக்கப் படாதது வருத்தமே” என்று ஜாபர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் ஒயிட் பாலில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற தகவலையும் அவர் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். வாசிம் ஜாஃபர் கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments