ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்!!!

 

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர் தற்போது அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக பல ஆண்டுகள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இவர் பின்பு சறுக்கிறார் என இந்திய அணியில் இருந்து விலக்கப் பட்டார். பின்பு ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரஞ்சிப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து இருந்தாலும் மீண்டும் என்னால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். “நீங்கள் ஒன்றை இழக்கும்போது அதில் பல மாற்றங்கள் உருவாகும். அணியில் ஏராளமான அதிரடி நீக்கம் மற்றும் மாற்றம் ஆகியவை நடைபெற்றது. நான் சிறப்பாக விளையாடவில்லை. அது மற்றவருக்கு வழிவகுத்தது. நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சிறந்த வீரராக மாறினேன். ஆனால் அதன்பின் வருடத்துக்கு வருடம் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தேன். ஆனால் ஒருபோதும் இந்திய அணியில் மீண்டும் என்னால் இடம்பிடிக்க முடியவில்லை.

முப்பது வயதை எட்டும்போது சற்று ஏமாற்றம் அடைந்தேன். அதிக அளவில் முதிர்ச்சி அடைந்து என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டேன. இந்திய அணிக்காக மீண்டும் அழைக்கப் படாதது வருத்தமே” என்று ஜாபர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் ஒயிட் பாலில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற தகவலையும் அவர் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். வாசிம் ஜாஃபர் கடந்த ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்!!!

தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது

ரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்!!! ஆச்சர்யப்பட்ட மக்கள்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது

திரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்!

சமீபத்தில் இந்திய சீன எல்லையான 'கால்வான்' பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர்.

கமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை

வாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு முன்னணி திராவிட கட்சிகளுக்கு இடையே கட்சியை வளர்க்க பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார்.