விஜய்க்கு அரசியல் ரீதியாக எனது ஆதரவு இல்லை: விஷால் பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2024]

விஜய்க்கு அரசியல் ரீதியாக எனது ஆதரவு இல்லை என்றும் விஜய்யின் அரசியல் தனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் விஷால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் பல தமிழக அரசியல்வாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தனது முதல் அரசியல் அறிக்கையாக சிஏஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் அறிக்கைக்கு விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தை தயாரித்த வினோத் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இதற்கு பிறகு நடிகர் விஜய் மீது நடிகராக மட்டுமே ஆதரவு, அரசியல் ரீதியாக ஆதரவு இல்லை. மேலும் அவரது அரசியல் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்களுடன் சேர்ந்து அவர் எதுவும் சாதிக்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் வினோத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

நாங்கள் தான் தனுஷின் அப்பா-அம்மா என கூறிய வழக்கு: மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

தனுஷின் அப்பா அம்மா நாங்கள்தான் என்று மதுரை  உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வழங்கப்பட்டுள்ளது. 

அமீர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஞானவேல் ராஜா அப்பா.. என்ன காரணம்?

இயக்குனர் அமீர் மீது ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில்

காதலிக்கிறவனுக்கு கண்ணு மட்டுமில்லை, அறிவும் கிடையாது: 'பிரேமலு' டிரைலர்..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை

அரசியல் கட்சியில் சேர்ந்த நடிகர் நாசரின் மகன்.. உறுப்பினர் அட்டை புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் நாசரின் மகன் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்துள்ளதாக உறுப்பினர் அட்டையுடன் கூடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடிகர் கார்த்தியா? வைரல் புகைப்படம்..!

சன் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் குழுவினர்களுடன் நடிகர் கார்த்தி நடித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை