யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளையை கற்று கொண்டேன்:கைதான குற்றவாளி பேட்டி 

  • IndiaGlitz, [Friday,July 26 2019]

சென்னை அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய இர்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இர்ஃபான் கூறிய வாக்குமூலம் பின்வருமாறு

சிறுவயதிலிருந்தே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்பை முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அந்த வேலையின்போது ஒருசில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதை கற்றுக் கொண்டேன். குறிப்பாக யூடியூப் மூலம் ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம்மில் பொருத்துவது எப்படி என்பதை கற்று கொண்டேன். பின்னர் ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம்மில் பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிவதையும், அதன்பிறகு போலி ஏடிஎம் கார்டு தயாரிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் கற்றுக் கொண்டேன்.

ஸ்கிம்மர் கருவியை ஆன்லைன் மூலம் சீனாவில் இருந்து வாங்கினார். அதன்பின்னர் அந்த ஸ்கிம்மர் கருவியை செக்யூரிட்டி இல்லாத ஏடிஎம்-இல் பொருத்துவேன். ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திவிட்டு 4 மணி நேரம் கழித்து அந்த ஸ்கிம்மர் கருவியை எடுத்து, அதில் உள்ள எண்கள் கொண்ட ஏடிஎம் கார்டுகளை போலியாக தயாரித்து அனைத்து கார்டுகள் மூலமும் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்ததாக இர்ஃபான் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்-ல் பணம் திருடுவதிலும் ஒரு டெக்னிக் வைத்துள்ளார். முந்தைய நாள் இரவு 11.55க்கு மேல் ஒரு குறிப்பிட்ட தொகையையும் ஐந்து நிமிடம் கழித்து மறுநாள் கணக்கு வந்தவுடன் அந்த நாளுக்குரிய பணத்தையும் அவர் எடுத்துள்ளார். பெரும்பாலும் வங்கியில் இருந்து வரும் குறுந்தகவலை வாடிக்கையாளர்கள் காலையில் தான் பார்ப்பார்கள் என்பதால் தனக்கு தப்பிக்க அதிக நேரம் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

சாதி சண்டையை மூட்டுவதே பா.ரஞ்சித்தின் திட்டம்: எச்.ராஜா 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கூறிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால்

வைரலாகும் 'இடுப்பு' புகழ் மீராவின் நடன வீடியோ

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து இழுத்ததாகவும், அதில் ஒரு உள்நோக்கம் இருந்ததாகவும், சேரன் கெட்ட எண்ணத்துடன்

மீரா சிறந்த போட்டியாளரா? கொதித்து எழும் சேரன்

இந்த வார கிராமத்து டாஸ்க்கில் சிறந்த டாஸ்க் வின்னர் நபரை தேர்வு செய்து அவர்களை அடுத்த வாரம் தலைவர் தேர்தலை போட்டியிட வைக்கும் நிலையில் சிறந்த டாஸ்க் வின்னர்

என் இடுப்பை பிடிச்சு சேரன் இழுத்தார்: மீராமிதுன் போட்ட புதுகுண்டு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காத போட்டியாளர்களில் ஒருவர் சேரன். சேரன் மீது சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது குற்றச்சாட்டை கூறி

சிஸ்டம் சரியில்லை என புலம்புவதில் பயனில்லை! சத்யராஜ் மகள் பேட்டி

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா 'அக்சயா பாத்ரா' என்ற அமைப்பின் விளம்பரத் தூதுவர் என்பதும், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அதிகம் பேசியவர்