கமல், ரஜினி மீது எனக்கு சந்தேகம்: பி.ஆர்.பாண்டியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் இருவரின் கொள்கைகளும், அவர்களுடைய படங்கள் போலவே வேறு வேறு திசையில் இருப்பதாக தெரிகிறது. இதுவரை கமல்ஹாசனை ரஜினிகாந்த் விமர்சிக்கவில்லை எனினும், அவருடைய அரசியல் பாதை கமல்ஹாசனின் அரசியல் பாதைக்கு இணையாக செல்லவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இருப்பினும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் உள்ளுக்குள் ஒரு புரிதல் உணர்வு இருப்பதாக ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, கமலுக்கும் ரஜினிக்கும் உடன்பாடு இருக்க வாய்ப்பு இருப்பதாக தான் சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'கமல், ரஜினி ஆகிய இருவரும் திரைப்பட கலைஞர்கள். இதில், கமல்ஹாசன் வேறுபட்டவராக இருப்பார் என்று நம்பி, குறுகிய காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றினோம். அந்த நம்பிக்கையை அவர் வீணடித்துவிட்டார். ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் தொழில்ரீதியாக உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அனைவரும் எதிர்க்கும் கமல்ஹாசனின் நடவடிக்கையை, ரஜினி ஆதரிக்கிறார் என்றால், ‘காலா’ படத்துக்காக அப்படி கூறியிருக்கலாம். கமலும், ரஜினியும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மேலானவர்கள் இல்லை. அந்த அளவுக்கு இருவரும் வலிமை உள்ளவர்களும் இல்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் கமல்ஹாசனுக்கு வீரவாள் கொடுக்கும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார் என்றும், அவர் பேச்சுவார்தை நடத்தி தண்ணீரைப் பெற்றுத்தந்தாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ள பி.ஆர்.பாண்டியன், குறுகிய காலத்திலேயே அவரிடம் இருக்கும் முதிர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments