ரஜினி, அஜித், தனுஷ் எனக்கு கிடைத்த பம்பர் பரிசு.. பிரபல நடிகை பெருமிதம்..!

  • IndiaGlitz, [Wednesday,September 25 2024]

ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பம்பர் பரிசு என்று பிரபல நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரை உலகிலும் நடித்து வருகிறார். தனுஷின் ’அசுரன்’ படத்தில் தமிழில் அறிமுகமான அவர் அதன் பின்னர் அஜித்தின் ’துணிவு’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அசுரன்’ திரைப்படத்தில் நடிக்க தனுஷ் தான் என்னை முதலில் அழைத்தார். அந்த படம் வெற்றிமாறன் அவர்களுக்காகவே நான் நடித்தேன்.

அதன் பிறகு எச். வினோத் அவர்கள் ’துணிவு’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது, நான் மிகவும் ஆர்வத்துடன் நடிக்க சம்மதித்தேன். அதன் பிறகு தான் அந்த படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரிந்தது.

அதே போல, ஞானவேல் அவர்கள் தன்னுடைய படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது, அவருடைய ’ஜெய்பீம்’ படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த நான் கண்டிப்பாக உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால் அப்போதுதான் அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று சொன்னார்கள். அதை கேட்டவுடன் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

மிகக் குறுகிய காலத்தில், எனக்கு ரஜினிகாந்த், அஜித், தனுஷ் ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பம்பர் பரிசு என்று மஞ்சுவாரியர் குறிப்பிட்டுள்ளார்.