இயக்குனர் சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகர் குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த படம் 'ஜீவா'. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் 'ஜீவா' படத்தில் ஒரு பாடலில் நடித்தது தன்னுடைய தவறான முயற்சி என்றும், இதற்கு காரணம் சுசீந்திரன் என்றும், இயக்குனர் சுசீந்திரனும், அவரது மேனேஜரும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'ஒரு ரோசா உன்னை லூசா ஆக்கி போனாளே லேசா' என்ற பாடலுக்கு நட்டி நட்ராஜ் நடனம் ஆடியிருப்பார். ஆனால் இந்த பாடலில் நடித்ததால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்ன என்பதை அவர் விளக்காததால் சமூக வலைத்தள பயனாளிகள் குழப்பத்தில் உள்ளனர்.

நட்டி நட்ராஜ் தற்போது 'சண்டிமுனி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மனிஷா யாதவ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.