திருமணத்தால் சினிமா வாழ்க்கையில் பாதிப்பா? காஜல் அகர்வால் கூறிய நெகிழச்சி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகான தனது சினிமா வாழ்க்கையைக் குறித்து சில நெகிழ்ச்சி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்திக் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருகிறார். இவர் தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துகொண்ட பிறகும் தொடர்ந்து முன்னணி திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் சில முக்கியப் படங்களில் இருந்து விலகவும் செய்தார். ஆனாலும் தனது கர்ப்பம் குறித்து எந்தத் தகவலையும் பகிர்ந்துகொள்ளாத அவர் இன்னும் 4 மாதங்களில் முதல் குழந்தைக்குத் தயாகப்போகிறார் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இப்படியிருக்கும்போது நடிகை காஜல் அகர்வால் திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இன்று திருமணமான நடிகைகள் தாயாகி வேலை கிடைக்காமல் போகும் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பாலிவுட் மற்றும் ஒட்டமொத்த இந்திய சினிமாவிலும் இந்த நிலைமை தற்போது மாறியிருக்கிறது. சொந்த வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்போது தொழில் வாழ்க்கையை பெரிதாகப் பாதிப்பதில்லை. இதை ரசிகர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு கதைத்தேர்வில் முற்றிலும் கவனம் செலுத்திவருகிறேன். அதோடு குடும்பம், வேலை என இரண்டு விஷயங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கான வழிமுறைகளை சிந்தித்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவான “ஆச்சார்யா“ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள நிலையில் இந்தத் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. அதேபோல பாலிவுட்டில் இவர் நடித்துள்ள “உமா“ திரைப்படம், பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகிவரும் “ஹே சினாமிகா“ போன்ற இவரது திரைப்படங்கள் உண்மையில் இவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com