அந்த நடிகரால் தான் மதுவுக்கு அடிமையானேன்: பிக்பாஸ் நடிகை பகீர் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,August 27 2022]

அந்த நடிகரால் தான் நான் மதுவுக்கு அடிமை ஆனேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை தேஜஸ்வி மடிவாடா தமிழில் ’நட்பதிகாரம் 79’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் தெலுங்கு இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் 42வது நாளில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை தேஜஸ்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த போது தன்னுடன் சக போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் கெளஷல் ரசிகர்கள் என்னைப் பற்றி ஆபாசமாக இணையதளங்களில் தகவல்களை பரப்பினார்கள் என்றும் அந்த மன உளைச்சலால் தான் மதுவுக்கு அடிமையானேன் என்றும் அதன் பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தான் மீண்டு வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சினிமா மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும் சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்தது என்றும் அதனை நான் எதிர் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.