'என்னால் ரூ.3000 கோடி வசூல் செய்யும் படம் எடுக்க முடியும்.. இவர்கள் இருவரும் நடித்தால்.. அட்லி பேட்டி..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் ’எனக்கு இந்த இருவர் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் ரூ.3000 கோடி வசூல் செய்யும் படத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அட்லி அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில், ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

எனக்கு இந்த இருவரும் கால்ஷீட் கொடுத்தால் கண்டிப்பாக என்னால் ரூபாய் 3000 கோடி வசூல் செய்யும் படத்தை மிக எளிதாக எடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். அட்லியின் இந்த ஆசையை ஷாருக்கான் மற்றும் விஜய் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.