திருநங்கை தனபாக்கியம் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணம்.
- IndiaGlitz, [Sunday,March 03 2024]
ஆணாக பிறந்து பிறப்புறுப்பாலும் சில மாற்றத்தினாலும் பெண்ணாக உணர்ந்து பின் மூன்றாம் பாலினத்தவராக அடையாளப்படுத்தப்பட்டு, தற்போது சிநேகிதி பவுண்டேஷன் அமைப்பின் தலைமை அதிகாரியாக செயலாற்றி வரும் மதிப்பிற்குரிய திருநங்கை தனபாக்கியம் அவர்கள், அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
பொதுவாகவே பெண்களுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்புகின்றனர். 33% பெண்களுக்கான ஆதரவுகள் உள்ளன. ஆனால் திருநங்கைகளுக்கு அதுவும் இல்லை...இன்றளவும் பொதுவெளியில் எங்களை ஒரு கேலி பொருளாக மட்டுமே பார்க்கின்றனர்.பல கொட்சையான பெயர்களை வைத்து எங்களை அழைக்கின்றனர்.
ஒரு பெண் தெருவில் நடந்து போனால் அவர்களின் நடை உடை பாவனை எல்லாம் பார்ப்பார்கள்.ஆனால் நாங்கள் தெருவில் நடந்து போனால் நேரடியாகவே எங்களை உடலுறவுக்கு வரீயா என்று கொட்சையாக கேட்பார்கள்.எங்கள் சமுதாயத்தில் இரத்த பந்த உறவாக பழகுபவர்களும் உள்ளனர் .அதே சமயத்தில் சில ஆண்கள் எங்களை போன்ற திருநங்கைகளை நடத்தும் விதம் மிகவும் மோசமாக உள்ளது.
சமுதாயத்தில் நாங்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மற்றவர்கள் எங்களை பார்க்கும் விதத்தை பார்த்து எத்தனையோ முறை அழுது இருக்கிறேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் சில மாற்றங்களை உணர்ந்தேன். அப்போது எனது பெண்மை தன்மையை வெளிப்படுத்தும் போது அதை என் அப்பா பார்த்து விட்டு என்னை கட்டி போட்டு அடித்து உதைத்தார். மேலும் என் அப்பா ஒரு சாதி வெறி பிடித்தவர்.
பள்ளியிலும் என்னை தரக்குறைவாக பேசி ஒதுக்கி ஒரு வருடம் முழுவதும் நான் வகுப்பறையை விட்டு வெளியே தனியா உட்கார்ந்து படித்தேன்.அதுமிட்டுமில்லாமல் சில ஆண்கள் என்னிடம் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்ட பல சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.
வீட்டை விட்டு வெளியே வந்து முதல் முதலாக எனது பிறந்த நாளன்று ஒரு திருநங்கையாக கை தட்டி என் காசை வாங்கினேன். என கண்ணீர் மல்க தனபாக்கியம் அவர்கள் கூறினர்.
மேலும் திருநங்கை தனபாக்கியம் அவர்கள் உரைத்த பல நிகழ்வுகளை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.