நான் தினமும் கோமியம் குடிக்கின்றேன்: அக்சயகுமார் அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் தன்னுடைய ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ’மேன் வெர்ஸஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்சயகுமார் கலந்து கொண்டார். இதுகுறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளதை அடுத்து இந்த டீசரை அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது யானைச்சாணத்தில் பியர்ல் கிரில்ஸ் தனக்கு டீ போட்டு கொடுத்ததாக அக்சயகுமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருசில நடிகைகள், ‘யானை சாணத்தில் போடப்பட்ட டீயை குடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என்று கேட்டதற்கு ’பியர் கிரில்ஸ் யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்தது குறித்து நான் எந்தவித கவலையும் படவில்லை. ஏனெனில் நான் தினமும் ஆரோக்கியத்துக்காக மாட்டு கோமியத்தையே குடித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே மாட்டுக் கோமியம் குடித்தால் உடலுக்கு நல்லது என பாஜகவினர் பலர் கூறி வரும் நிலையில் தற்போது அக்சயகுமார் அதே கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Less than 2 hours to go...Can’t wait to chat with you all and @BearGrylls of course??Don’t forget to catch us LIVE on my Instagram at 2 pm IST today,just one change..unfortunately @Vaaniofficial won’t be with us today,instead we’ll be in conversation with the lovely @humasqureshi pic.twitter.com/6F1G6WroUz
— Akshay Kumar (@akshaykumar) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments