'சர்கார்' படத்தின் பாடலை எழுதினாரா காமெடி நடிகர் விவேக்?

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் சிமிட்டங்காரன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலை காமெடி நடிகர் விவேக் எழுதியதாக ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'அன்புடையீர், சர்கார் பாடல் நான் எழுதவில்லை. அது விவேக் பாடல் ஆசிரியர் எழுதியது. நான் எழுதிய பாடல் எழுமின் படத்தில் வரும் “ விழுந்தால் விதை”. அனிருத் பாடியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

'எழுமின்' படத்தில் நடிகர் விவேக் எழுதிய ஒரு விழிப்புணர்வு பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக 'வெற்றி மகிழ்ச்சி மட்டும்தான் கொடுக்கும், ஆனால் தோல்வி தான் உங்களை செதுக்கும்' என்ற விவேக்கின் வரி அனைவரையும் கவர்ந்துள்ளது.