பொய்யான சாதனைகள் நமக்கு தேவையில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி

  • IndiaGlitz, [Thursday,August 27 2015]

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஒரே தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை செய்துள்ள திரைப்படம் 'பாகுபலி'. இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வெற்றியை குவித்துவிட்டதால் 50 நாட்கள் மற்றும் 100 நாட்கள் என தேவையில்லாமல் திரையரங்குகளில் திரையிட்டு பொய்யான சாதனையை நிகழ்த்த தான் விரும்பவில்லை என இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.

ஒரு திரைப்படம் 50 நாட்கள், 100 நாட்கள், மற்றும் 200 நாட்கள் என ஓடிய வரலாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 500 முதல் 1000 திரையரங்குகளில் வெளியாவதால் ஒரு வாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்றும், மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓடினால் அது சூப்பர் ஹிட் படம் என்றும் அறிய முடிகிறது.

இந்நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த படம் அதிக நாட்கள் ஓடி சாதனை படைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இந்த படம் ஏற்கனவே நிகழ்த்திய சாதனைகள் போதுமானது. மேலும் மிகைப்படுத்தப்பட்ட சாதனைகளை நான் விரும்பவில்லை. அடுத்து வரும் படங்களுக்கு வழிவிடுவதுதான் நல்லது' என அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

காமெடி நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக கடந்த சில வருடங்களாக கொடி கட்டி பறந்த நடிகர் சந்தானம், தற்போது காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக...

விஜய் சீனியர் நடிகர் இல்லை. ஹன்சிகா

விஜய்யுடன் வேலாயுதம், புலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஹன்சிகாவிடம் சமீபத்தில் 'சீனியர் நடிகரான விஜய்யுடன்...

கிளைமாக்ஸை நெருங்கியது 'தல 56'

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராமி மால் மற்றும் தனியார் மருத்துவமனை...

குடியும் குடித்தனமும்' டைட்டிலுக்கு மறுப்பு தெரிவித்த எம்.ராஜேஷ்

சமீபத்தில் எம்.ராஜேஷ் இயக்கிய 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்...

ஸ்ரீதேவி புலிகபூர் ஆக மாறிய ஸ்ரீதேவி போனிகபூர்

விஜய் நடித்துள்ள 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றால் அது ஸ்ரீதேவி கேரக்டர்தான் என படக்குழுவினர் அனைவரும் கூறி வரும் நிலையில்...