ரஜினியின் கருத்தை ஆதரிக்கவில்லை: நெருங்கிய நண்பரின் அறிக்கையால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
ஊரடங்கு நேரத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறப்பதற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினியின் டாஸ்மாக் எதிர்ப்பு டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பிக்களான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் ரஜினியின் டுவீட் குறித்து விமர்சனம் செய்தனர். டாஸ்மாக் கடையை திறந்த தமிழக அரசை விமர்சனம் செய்யும் ரஜினிகாந்த், மதுக்கடைகளை திறக்க அனுமதித்த மத்திய அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர்
இந்த நிலையில் ரஜினியின் டாஸ்மாக் கருத்துக்கு ரஜினியின் மிக நெருங்கிய நண்பரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தனது ஆதரவை தெரிவித்ததாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனை அடுத்து முக அழகிரி தற்போது இந்த செய்தியை மறுத்துள்ளார்
டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பது குறித்து நண்பர் ரஜினியின் கருத்தை நான் ஆதரித்ததாக வெளிவந்த தகவல் தவறானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் எனக்கு இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை என்று முக அழகிரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
உன்மையை உரக்க சொன்னிங்க நண்பா... https://t.co/JJU00ZnSqU
— M.K.Alagiri (@mkAlagiri_) May 10, 2020