'காலா' குறித்து பேசுவது தேவையற்றது: கர்நாடக முதல்வர் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி
- IndiaGlitz, [Monday,June 04 2018]
காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களிடம் பேசுவதற்காக நேற்று இரவு பெங்களூர் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவரை முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்பொது இரு தலைவர்களும் காவிரி பிரச்சனை குறித்து பேசியதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 'திரைப்படங்களை விட காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கூறினார். மேலும் 'காலா' விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் பேசினீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்: 'காலா' குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் பேசுவது தேவையற்றது; பேசவும் இல்லை' என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியபோது, 'கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் விவசாயிகள் சகோதர சகோதரிகளாகவே சரியாக சமமாக நீரை பங்கிட்டு கொள்ளவேண்டும் என்று நானும் தகமல்ஹாசன் அவர்களும் கலந்தாலோசித்தோம்' என்று கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையத்தின் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது