ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்க மாட்டேன்: விஷால்

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நடிகர் விஷால், இன்று காலை அண்ணாநகர் சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜி.ஆர். சிலை, தி.நகரில் உள்ள காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் அரசியல்வாதி அல்ல, மக்கள் பிரதிநிதியாகவே ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை, ஆர்.கே.நகரின் மக்கள் கொடுத்த தைரியம்தான் எனக்கு ஆதரவு. ஆர்.கே. நகர் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

எந்த அரசியல் கட்சியின் வாக்கு வங்கியை பிரிக்க நான் போட்டியிடவில்லை. எனக்கு 100% வெற்றி வாய்ப்பு உள்ளது. மேலும் எனக்கு ஆர்.கே.நகர் மக்களின் ஆதரவு முழு அளவில் இருப்பதால் ரஜினி, கமல் உள்பட யாரிடமும் நான் ஆதரவு கேட்க மாட்டேன். 

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அண்ணன் மகன் போட்டி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வேலைக்காரன்' ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் எடுத்த முக்கிய முடிவு

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான வேலைக்காரன்' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்ரு சென்னையில் நடந்தது.

சுசி கணேசன் 'திருட்டுப்பயலே 2' ஓப்பனிங் வசூல் விபரம்

சுசீந்திரன் இயக்கிய 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகமான 'திருட்டுப்பயலே 2' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

சன்னிலியோன் நாயகியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த நிலையில் தற்போது ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மனுதாக்கலுக்கு முன் விஷால் செய்ய போகும் மரியாதை

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.