கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ஐந்து வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவரை போல சினிமாவின் நுணுக்கங்களை அறிந்தவர் கோலிவுட்டில் வேறு யாரேனும் இருக்கின்றார்களா? என்பது சந்தேகமே. இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன், இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் திரைப்படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த முடிவு குறித்து இயக்குனர் கவுதம்மேனன் வருத்தம் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன். அவர் சினிமாவில் இருந்து வெளியேறுவதை என்னால் பார்க்க முடியாது. ஒரு ரசிகனாக அவருடன் பணிபுரிந்தவனாக இதனை கூறுகின்றேன்' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படத்தை இயக்கிய போது அவரிடம் இருந்து சினிமாவை அதிகம் கற்றுக்கொண்டதாகவும், அந்த படம் தனது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படம் என்றும் கவுதம் மேனன் மேலும் கூறியுள்ளார்.

More News

அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்

பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம்.

'இருட்டு அறைக்கு' கிடைத்த எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ்

'ஹர ஹர மகாதேவி' படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரின் அடுத்த படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது

மால்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து! இங்கல்ல...தெலுங்கானாவில்

தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் பார்க்கிங் கட்டணம் என்ற கொள்ளையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில்