அந்த நடிகர் யார் என்றே எனக்கு தெரியாது: ஷகிலா பதிலால் பரபரப்பில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

அந்த நடிகர் யார் என்றே எனக்கு தெரியாது: ஷகிலா பதிலால் பரபரப்பில் ரசிகர்கள்

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா அவ்வபோது பேட்டிகள் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மலையாள சேனலுக்கு அவர் பேட்டி அளித்தபோது தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனை பற்றி தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஷகிலாவை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் மகேஷ்பாபுவை தனது சகோதரர் போன்றவர் என்றும் ஜூனியர் என்டிஆர் சிறப்பாக நடனம் ஆடுபவர் என்றும் கூறியுள்ளார். மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆரை தெரிந்த ஷகிலாவுக்கு அல்லு அர்ஜூனை எப்படி தெரியாமல் போனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது. ஷகிலா கேரக்டரில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

திருமண நாளில் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற இளம்பெண் பரிதாப பலி!

வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் வினிசைலா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறார்.

காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற: யோகிபாபுவின் ட்ரிப் டீசர்

தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த இன்னொரு திரைப்படம் ட்ரிப். இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

உடலுக்கு நல்லது என கூறிய Facebook வீடியோ பார்த்து, ஜூஸ் போட்டு குடித்த இளைஞர் பலி.

ஒரு நாள் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்த போது அதில் கஜ மாடரா என்ற மரத்தின் இலைகளை பரிந்து அதை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

மணப்பெண்ணின் சேலை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.!

சேலை பிடிக்காததற்காக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்