ராணி பத்மினி யார் என்றே எனக்கு தெரியாது: தீபிகா படுகோனே
Send us your feedback to audioarticles@vaarta.com
சஞ்சய் லீலா பன்சாலி நடிப்பில் தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் கடந்த வாரம் வெளியானது. நான்கு மாநிலங்களில் இந்த படம் வெளிவரவில்லை என்ற போதிலும் இந்தியாவில் ரூ.100 கோடியும், உலகம் முழுவதும் ரூ.200 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகும் முன் தனக்கு ராணி பத்மினி என்றால் யார் என்றே தெரியாது என்றும் ஏனெனில் தான் ஒரு வரலாற்று மாணவி அல்ல என்றும் தீபிகா படுகோனே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த படத்தின் கதையை கேட்டபின்னர் தான் ராணி பத்மினி குறித்து படித்து தெரிந்து கொண்டதாகவும், அந்த கதையை படித்து முடித்தவுடன் பத்மினியாகவே மாறிவிட்டதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
மேலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறிய தீபிகா . மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் இருப்பினும் சினிமாவில் எதுவேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், தன்னை பாதிக்கும் வரலாற்று கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout