பிக்பாஸ் வேணவே வேணாம்: 'குக் வித் கோமாளி' சீசன் 3 ஃபைனலிஸ்ட் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தால் போக மாட்டேன் என்றும் அந்த நிகழ்ச்சி வேண்டவே வேண்டாம் என்றும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நிறைவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 இறுதிப் போட்டியாளர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். ஸ்ருதி, அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், சந்தோஷ் பிரதாப் மற்றும் வித்யூலேகா ஆகிய 6 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று 3 மணி நேரம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான வித்யூலேகா தனது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என்று கேள்விக்கு, ‘வேண்டவே வேண்டாம்! நான் சந்தோஷமாக இருக்கிறேன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் செல்ல விரும்பவில்லை. காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலேயே சில சர்ச்சைகளை எழுப்புகிறார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் அவ்வளவுதான்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
மேலும் முத்துகுமார் குறித்து அவர் கூறியபோது, ‘அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், அவர் மீது ஒரு சொட்டு நெகட்டிவ் கருத்து கூட எனக்கு கிடையாது. நல்ல திறமையானவர். அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறக்கூடிய ஒரு போட்டியாளர் என்றும் கூறினார். கிரேஸ் அக்காவுக்கு மோட்டிவேட் செய்ய வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை பேசினேன். அவரிடம் இதுகுறித்து பேசியபோது, ‘நான் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை’ என்று கூறியதாக தெரிவித்தார்.
CWCல் Controversy create பண்ண ட்ரை பன்றாங்க.. - #Vidyullekha pic.twitter.com/dfR6jjtzZT
— Parthiban A (@ParthibanAPN) July 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com