ஓவியாவுடன் மீண்டும் இணைய தயார்: ஆரவ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு ஆரவ் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் தேவைப்பட்டால் ஓவியாவுடன் இணைய தயார் என்று கூறியுள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை அனைவரும் வில்லனாக பார்க்க ஆரம்பித்ததே ஓவியாவின் விஷயத்தில்தான்.ஓவியாவின் காதலை நிராகரித்தது, ஓவியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாக இருந்தது ஆகியவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் நிச்சயம் ஆரவ் வெற்றிக்கு தகுதியான நபராகத்தான் இருந்தார்
இந்த நிலையில் ஆரவ் தனது பேட்டியில் கூறியபோது, 'பிக்பாஸ் வீட்டில் இருந்த நபர்களில் ஓவியாதான் அனைவராலும் விரும்ப்பபட்டவர். ஓவியா புத்திசாலி மட்டுமின்றி இனிமையானவராகவும் இருந்தார். ஆனால் சிலசமயம் அவருடைய செய்கைகள் எல்லை மீறி இருந்ததால் அவர் ஒவ்வொரு முறையும் நாமினேட் செய்யப்பட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் எவிக்சனில் இருந்து தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தற்போது வெளியே வந்தபின்னர்தான் ஓவியாவுக்கு இருக்கும் ரசிகர்கள் குறித்து தெரியவந்தது' என்று கூறினார்.
மேலும் தற்போது பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்து படங்கள் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், அதுகுறித்த விவாதங்களும் நடந்து வருவதாக கூறிய ஆரவ், ஓவியாவுடன் இணைந்து நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வாய்ப்பு கிடைத்தால் ஓவியாவுடன் நடிப்பேன் என்றும் ஆரவ் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments