ரஜினி, கமலுக்கு ஆதரவில்லை: தினகரனை ஆதரிக்க போவதாக பிரபல நடிகர் பேட்டி

  • IndiaGlitz, [Friday,August 03 2018]

அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் ரஜினி, கமலுக்கு தனது ஆதரவு இல்லை என்றும், நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் டிடிவி தினகரனை ஆதரிக்க உள்ளதாகவும் பிரபல நடிகர் தினேஷ் கூறியுள்ளார்.

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'கபாலி' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் தினேஷ். இவர் நடித்து முடித்துள்ள 'அண்ணனுக்கு ஜே' என்ற திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய தினேஷ், 'தனக்கு சிறு வயதிலேயே அரசியலில் விருப்பம் உண்டு என்றும், குறிப்பிட்ட அனுபவம் கிடைத்தவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். மேலும் அரசியலுக்கு வந்தால் ரஜினி, கமலை ஆதரிக்க மாட்டேன் என்றும் தமிழகத்தில் நன்றாக செயல்பட்டு வரும் டிடிவி தினகரனை ஆதரிப்பேன் என்றும் அவர் அனைத்தையும் நேர்த்தியும் அணுகும் முறை தன்னை கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் மக்களுக்கு வழிகாட்ட சரியான தலைவர் இல்லை என்றும் நியாயமான கோரிக்கைக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்: பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக சர்வாதிகாரி டாஸ்க்கால் ரணகளமாக பிக்பாஸ் வீடு இருந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

சக்கரநாற்காலியில் அமர்ந்த கருணாநிதி: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு இருந்தாலும்

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் குறித்த தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'கும்கி 2'

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படமான 'இதயக்கனி' படத்துடன் பிரபுசாலமன் இயக்கி வரும் 'கும்கி 2' படம் கனெக்சன் ஆகியுள்ளது.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோதிகா

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள பெண் ஷெரில், ஜிமிக்கி கம்மல் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தென்னிந்தியாவையே பரபரப்புக்கு உள்ளானது.