ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும் இன்று பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்கள் மிக நல்ல மனிதர். அவரிடம் நான் நிறைய ஆன்மீகம் சம்பந்தமாக பேசி இருக்கின்றேன். அவரிடம் பேசினால்தான் அவர் எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர் என்பது தெரியும்.

தமிழ்நாட்டில் ஒரு புதுவகையான புதுமையான அரசியல் கொடுக்க வேண்டும் என்றும், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவருடைய தனிப்பட்ட ஸ்டைலில் அரசியல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரை நான் வரவேற்கிறேன். தமிழகம் ரஜினிகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அவர் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து நான் விமர்சனம் செய்ய முடியும். நான் அவருடன் ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருந்தாலும் அரசியல் குறித்து இதுவரை பேசவில்லை. அரசியலுக்காக அவர் தயாராகி வருகிறார் என்று நான் நினைக்கின்றேன். அவருக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருவார்’ என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியுள்ளார்.

More News

தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்

தனுஷ் நடித்த 'மாரி 2' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே.

திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது: கமல் வாழ்த்து கூறியது யாருக்கு?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக