சி.எஸ்.கே.வுக்காக இனி தோனி விளையாட மாட்டாரா? அவரே அளித்த அதிர்ச்சி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் இனிமேல் சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவேனா என்பது எனக்கே தெரியாது என தோனி கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே கேப்டனாக தல தோனி இருந்து வருகிறார் என்பதும் இதுவரை ஒரே அணியில் கேப்டனாக நீடித்து வருவது அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இடையில் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருந்த போது மட்டும்தான் தோனி வேறு அணியில் விளையாடினார் என்பதும் அதன் பின்னர் மீண்டும் அவர் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக திரும்பி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தோனியின் பேட்டிங் ஃபெர்பார்மன்ஸ் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அவர் அடுத்த தொடரில் அவர் இருப்பாரா என்ற சந்தேகத்தையும் விமர்சகர்கள் கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவார் என சிஎஸ்கே ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் எதிர்பார்க்கும் நிலையில் திடீரென இன்று அளித்த பேட்டி ஒன்றில் என்னை அடுத்த வருடம் மஞ்சள் உடையில் காண்பீர்கள், ஆனால் சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. அதில் நிறைய நிச்சயமின்மைகள் உள்ளன என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தல தோனி ஐபிஎல் போட்டியில் இருந்து விலக போகிறாரா? அல்லது வேறு அணியில் விளையாட போகிறாரா? அல்லது சிஎஸ்கே உள்பட ஏதாவது ஒரு அணிக்கு வழிகாட்டியாக பணியாற்றப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
"You'll see me in yellow next season but whether I'll be playing for CSK you never know. There are a lot of uncertainties coming up, two new teams are coming, we don't know what the retention rules are and so on." - THALA#CSKvPBKS #WhistlePodu #Yellove ???? pic.twitter.com/FwfctwMSNo
— Chennai Super Kings - Mask P??du Whistle P??du! (@ChennaiIPL) October 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments