நான் பாஜகவில் இணைகிறேனா? சந்தானம் அளித்த விளக்கம்!
- IndiaGlitz, [Sunday,November 15 2020]
கடந்த சில மாதங்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பதவி ஏற்ற பின்னர் குஷ்பு உள்பட பல பிரபலங்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஷால் உள்பட மேலும் சில திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைய இருப்பதாக வதந்திகள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சந்தானமும் பாஜகவில் இணைய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன
இந்த நிலையில் சந்தானம் நடித்த ’பிஸ்கோத்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த வதந்திக்கு சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்
’பாஜகவில் இணையும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறிய சந்தானம், ’நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தி, பிஸ்கோத் படத்தின் காமெடியை விட மிகப் பெரிய காமெடி’ என்று சந்தானம் கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது