அறுவை சிகிச்சை எல்லாம் செய்யவில்லை, அதற்கு பதில் இதை மட்டும் தான் செய்தேன்: பிக்பாஸ் ரேஷ்மா
- IndiaGlitz, [Saturday,June 17 2023]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு தான் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியில் 42 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அதன் பின் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி என்ற தொடரில் இவர் நடித்து வரும் நிலையில் அந்த தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரேஷ்மாவிடம் ஒரு ரசிகர் ’நீங்கள் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா? என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் ’நான் அறுவை சிகிச்சை எல்லாம் செய்யவில்லை, ஆனால் அதற்கு பதிலாக உதட்டில் லிப் பில்லிங் மட்டும் செய்து இருக்கிறேன், இது மிகவும் சர்வசாதாரணமாக அனைவரும் செய்வது தான், ஆனால் அதை ஏன் எல்லோரும் இப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.