என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி வரியை தவிர வேறு எந்த வரியும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இன்னும் ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியையும் சேர்த்து தான் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 'சகுந்தலாவின் காதலன்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து நடிகர் விஷால் பேசினார். அவர் கூறியதாவது:
மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout