மத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா? இளையராஜா விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையே பிரச்சனை நீண்டு வந்த நிலையில் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்ததாகவும், இதனை மௌனமாக மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்ததால், மத்திய மாநில அரசுகள் தந்த விருதுகளை அவர் திருப்பி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன
மத்திய மாநில அரசுகள் பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் மௌனம் காப்பதால் இளையராஜா தான் பெற்ற விருதுகளை திருப்பித் தருகிறார் என இசை அமைப்பாளர் சங்க தலைவர் தீனா தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது
இந்த நிலையில் இது குறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்து கூறியதாவது: என் அன்புக்குரியவர்களே வணக்கம்! நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபருடைய கருத்தை, நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லி கொடுக்கிறேன். அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்! என்று தெரிவித்துள்ளார்
இதில் இருந்து இளையராஜா தனது விருதுகளை திருப்பி தரவுள்ளதாக வெளிவந்த தகவல் அனைத்தும் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் மத்திய மாநில அரசு விருதை திருப்பி அளிக்கவில்லை..அப்படி பரவுவது என் கருத்து இல்லை ..இளையராஜா #ilayaraja pic.twitter.com/Z6sLbkQgiC
— meenakshisundaram (@meenakshinews) January 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments