நான் ஒன்றுக்கும் உதவாதவனா? தென்ஆப்பிரிக்க வீரர் கடும் ஆதங்கம்!
- IndiaGlitz, [Saturday,September 11 2021] Sports News
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் அதன் நட்சத்திர வீரர்கள் டுபிளெசிஸ் மற்றும் இம்ரான் தாகிர் ஆகிய இருவருமே இடம்பிடிக்க வில்லை. இந்தத் தகவல் அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ள நிலையில் நான் என்ன ஒன்றுக்கும் உதவாதவனா? என ஆதங்கம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார் இம்ரான் தாகிர்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஒதுக்க முடியாத பிரபலங்கள் டுபிளெசிஸ் மற்றும் இம்ரான் தாகிர். இவர்கள் இருவருமே தென்ஆப்பிரிக்க அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். கூடவே டி20 கிளப் கிரிக்கெட் அணிகளுக்காகப் பல முறை களம் இறங்கியுள்ளனர். இதில் டுபிளெசிஸ் பேட்டிங்கில் ரவுண்டு கட்டினால் இம்ரான் தாகிர் பவுலிங்கில் அசத்துவார். இப்படி இருக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இருவரையும் டி20 உலகக்கோப்பை அணிக்குத் தேர்வு செய்யாமல் விட்டுவிட்டது.
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் தெம்பா பவுமா (கேப்டன்), குவிண்டன் டீ காக், போர்டுயின், ஹென்றிக்ஸ், கிளாசன், லிண்டே, கேவன் மகராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி இங்கிடி, பெலுவ்யோ, ஆன்சி நார்ட்யே, பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி, வான் டெர் டியூசன், எல்.வில்லியம்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அணியில்தான் இடம்பெறாதது குறித்து பேசிய இம்ரான் தாகிர், “எல்லா லீகுகளிலும் என் ஆட்டத்தைப் பார்த்து வருகிறீர்கள், நான் ஆட்டத்தில் சோடை போகவில்லை. கடினமாக உழைக்கிறேன். ஏ.பி.டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் ஆகியோரிடமும் பேசப்போகிறேன். யாருமே என்னை தொடர்பு கொள்வதுமில்லை. நான் ஸ்மித், பவுச்சருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினேன் பதில் இல்லை. பவுச்சர் கோச் ஆன பிறகும் கூட அவர் என்னை அழைக்கவில்லை.
இது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. நான் நாட்டுக்காக 10 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளேன். நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று இவர்கள் நினைத்தால் அவர்களுக்கு கூறுகிறேன் நான் இன்னும் கூடுதல் மரியாதைக்குரியவன். தென் ஆப்பிரிக்காவுக்காக நான் உலகக்கோப்பையை வென்றுதருவதில் ஆவலாக இருக்கிறேன். நான் ஓய்வு அறிவிக்க விரும்பவில்லை. நான் 50 வயது வரை ஆடத்தான் போகிறேன்” என்று ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார். இவருடைய பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.