உதை கிடைக்கு பாத்துக்க என கமலிடமும், வெய்யில் தாங்கமுடியலபா சீக்கிரம் ஷூட் முடி என ரஜினியிடமும் சொன்ன சுமித்ரா....
- IndiaGlitz, [Monday,September 16 2024]
நடிகை சுமித்ரா கேரள திருச்சூரில் பிறந்தவர். 1970 களில் நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். யாருடன் நடிகையாக நடித்தாரோ, அந்த முன்னணி நடிகர்களுக்கு தாயாகவும் பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர்.
சிவாஜி, கமல், ரஜினி போன்ற ஜாம்பவான்களோடு நடித்ததெல்லாம் பாக்யம்ம் என்றும், நடிகர் திலகம் தனக்கு நடிக்க சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறக்கவே முடியாதது என்று சிலாகித்து நடிகை சுமித்ரா பேசியுள்ளார்.
Indiaglitz நேயர்களுக்கு அவர் அளித்த பேட்டி இதோ.....
நிர்மால்யம் என்ற மலையாளப்படம்தான் என் முதல் திரைப்படம். அப்போது எனக்கு 14 வயது. ரொமான்ஸ் என்றால் அர்த்தமே தெரியாது. தேசிய விருது பெற்ற திரைப்படம். இந்த படத்தை பார்த்துவிட்டு, என்னை அவளும் பெண்தானே தமிழ் படத்திற்கு புக் செய்ய கேரளாவில் இருந்த நிலம்பூர் என்ற கிராமத்திற்கு வந்தார்கள்.
எனக்கு மொழி மீது ஆர்வம் அதிகம் அதனால் தமிழ், கன்னட மொழிகளை மிக விரைவில் கற்றுக்கொண்டேன். நானே கன்னட படத்திற்கு Dubbing கொடுத்ததை பார்த்துவிட்டு அங்கு இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
நடிகர் திலகத்தோடு நடித்த அண்ணன் ஒரு கோவில் மிகவும் சவாலான கதாபாத்திரம். அவருக்கு தங்கையாக நீதிமன்ற கூண்டில் நடித்த ஸீன் மறக்க முடியாத ஒன்று. அந்த நீதிமன்ற காட்சியில எப்படி நடக்கணும் னு அவர் சொல்லி கொடுப்பார். ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்ளோ Gap விடணும் இப்டி நிறைய சொல்லிக்கொடுத்தார். அது எல்லாம் என் பாக்கியம்.
சிங்கார வேலன் படத்தில கமலுக்கு அம்மாவா நடிச்சிருப்பேன். சுமி, சுமினு கூப்பிட்டவறு மம்மி மம்மி னு கூப்பிடவும் எனக்கு தாங்கமுடியலை.
பணக்காரன் படத்துலயும் இறுதி காட்சில ரஜினி என்னை வந்து கட்டிபிடிச்சி அழுகுற ஸீன், அவரால என்ன பார்த்து அம்மானு கூப்பிட முடியல. நிறையா ஷாட் போச்சு. என் பொஷிஷன் மாத்தின பிறகுதான் அந்த ஸீன் எடுக்க முடிஞ்சிது.
டபுள் ரோல்ஸ் படங்கள் எல்லாம் இன்று ஈசியாக எடுத்துவிடுகிறார்கள். அந்த கால கட்டத்தில் இத்தனை தொழில்நுட்பம் இல்லை, நான் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். கடவுள் அமைத்த மேடை படத்தில் டபுள் ரோல் பண்ணியிருந்தேன்.
அஜித் சார் ஒரு ஹீரோ மாதிரியே நடந்துக்க மாட்டார். எல்லார்கூடயும் ரொம்ப அன்பா இருப்பார். கேரவனுக்கு 11 மணிக்கு டெய்லி சிக்கன் சூப் அனுப்புவார். யார் சார் இப்படியெல்லாம் பார்த்துப்பாங்க. அவர் வீட்ல உள்ளவங்ககிட்ட எப்படி பழகுறாரோ, அப்படியேதான் நம்ம கிட்டயும் பழகுவார்.
பல்வேறு விஷயங்களை இந்த பேட்டியில் அவர் சொல்லியுள்ளார்.