அடுத்த காதலுக்காக காத்திருக்கின்றேன்: ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வந்தார் என்பதும் இந்த காதலுக்கு தனது தாயார் சரிகாவிடம் அவர் சம்மதம் பெற்றுவிட்டார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென ஸ்ருதிஹாசன் - மைக்கேல் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த காதல் முடிவுக்கு வந்தது. இதனை இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் உறுதி செய்து, இனி தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தனது முறிந்த காதல் குறித்து முதல்முறையாக மனம் திறந்தார். ’காதலுக்கு இது தான் விதி என்றும் எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இந்த காதல் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவம்தான்’ என்று கூறினார்.

மேலும் ’அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும் அந்த காதல் சிறந்த காதலாக இருக்கும் என நம்புவதாகவும், அந்த காதல் கிடைத்தால், மகிழ்ச்சியாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்வேன்’ எனவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் சாத்தியமில்லை: நயன்தாரா

புதுமுக நடிகைகள் மற்றும் வளரும் நடிகைகள் கவர்ச்சி காட்டி தங்களது மார்க்கெட்டை அதிகரிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய நடிகைகளும்

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரஹானே. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரிலும் விளையாடி வருகிறார்.

என்னை பிடிக்காதவர்கள் என் படங்களை பார்க்க வேண்டாம்: அஜித் நாயகி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், 'தன்னை பிடிக்காதவர்கள்

பெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்

உலகின் தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்று கூறுவதுண்டு. அது உண்மையும் கூட. ஒரு தாய் தனது குழந்தைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்.

முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு: அதிமுகவில் இணைந்த நடிகர் பேட்டி

நடிகர் ராதாரவி கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் பேசியபோது நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.