'கனா' மொத்த டீமுக்கும் வில்லன் நான் தான்: வெற்றிவிழாவில் பேசிய பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த வெற்றிப்படமான 'கனா' படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவருக்கும் ஷீல்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது. குறிப்பாக மூத்த நடிகர் சத்யராஜூக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டடது.
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய இந்த படத்தின் எடிட்டர் ரூபன், 'இந்த படத்தில் பணிபுரிந்தபோது எனக்கு கிடைத்த அற்புதமான அனுபவம் என்னை மேலும் மெருகேற்றியது. அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. இந்த படத்தின் நீளம் காரணமாக ஒருசில நல்ல காட்சிகளையும் வெட்ட வேண்டிய நிலை இருந்தது. இதனால் இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவினர்களுக்கும் நான் வில்லனாக மாறிவிட்டேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments