'கனா' மொத்த டீமுக்கும் வில்லன் நான் தான்: வெற்றிவிழாவில் பேசிய பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த வெற்றிப்படமான 'கனா' படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவருக்கும் ஷீல்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது. குறிப்பாக மூத்த நடிகர் சத்யராஜூக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டடது.

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய இந்த படத்தின் எடிட்டர் ரூபன், 'இந்த படத்தில் பணிபுரிந்தபோது எனக்கு கிடைத்த அற்புதமான அனுபவம் என்னை மேலும் மெருகேற்றியது. அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. இந்த படத்தின் நீளம் காரணமாக ஒருசில நல்ல காட்சிகளையும் வெட்ட வேண்டிய நிலை இருந்தது. இதனால் இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவினர்களுக்கும் நான் வில்லனாக மாறிவிட்டேன்' என்று கூறினார்.

More News

ஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த அமெரிக்க பதவி

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி என்பது அனைவரும் அறிந்ததே

சாயிஷா-யோகிபாபுவை இணைத்து வைத்த இயக்குனர் விஜய்!..

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகரான யோகிபாபு, 'தர்மபிரபு, ஜாம்பி, போன்ற ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

விக்ரம் மகனுக்கு கைகொடுக்கும் சூர்யா

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்து நடித்த 'பிதாமகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே

முதல்வர் பதவிக்கு தகுதியான நடிகர் யாரும் இல்லை: சத்யராஜ்

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது ஏன் என்பது குறித்து நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கார்த்தி படம்?

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது நடித்து முடித்திருக்கும் படம் 'தேவ்'.