28 ஆண்டுகளை பூர்த்தி செய்த தல அஜித்: காமன் டிபியை வெளியிட்ட காமெடி நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கிய ’அமராவதி’ என்ற திரைப்படத்தில்தான், தல அஜித் நடிகராக அறிமுகமானார். இந்த நிலையில் தல அஜித் திரையுலகிற்கு அறிமுகமாகி 28 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் அஜித்தின் 28 ஆண்டு கொண்டாட்டத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து காமன் டிபி ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த காமன் டிபி போஸ்டரை தமிழ் சினிமாவின் காமெடி நடிகைகளில் ஒருவரான வித்யூராமன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தல அஜித் அவர்களின் 28 ஆண்டுகளாக காமன் டிபியை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பெருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காமன்டிபி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடித்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.