நீட் தேர்வு எழுத நான் தயார்! ஸ்டாலின் தயாரா? தமிழிசை சவால் கேள்வி

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக மாணவர்களும், எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றனர்.

ஆனால் பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் நீட் தேர்வு தேவை என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் தரமான கல்வி இந்தியா முழுவதும் கிடைக்க நீட் அவசியம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களால் இன்று நீட் தேர்வு எழுத முடியுமா? என்று சமூக வலைத்தள பயனாளிகளும், நீட் எதிர்ப்பாளர்களும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை அவர்கள், 'நான் கஷ்டப்பட்டு படித்துதான் மருத்துவர் ஆனேன், நீட் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெறுவேன். இன்று கூட நான் நீட் தேர்வு எழுத தயார், ஆனால் ஸ்டாலின் நீட் தேர்வு எழுத தயாரா? என்று சவால் எழுப்பியுள்ளார். இந்த சவாலுக்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்