ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரியின் அந்தர் பல்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு ஏதும் வராததால் தனது பலத்தை நிரூபிக்க வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதி பேரணி நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அழகிரி பேட்டியளித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தன்னை மீண்டும் திமுகவில் இணைத்து கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்று செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார். தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த அழகிரி தற்போது திடீரென அந்தர்பல்டி அடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அழகிரியை கட்சியில் இணைக்க ஸ்டாலின் தயக்கம் காட்டி வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments