கட்டணம் கட்டினால் ரஜினிக்கு பாடம் எடுக்க தயார்? அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,August 15 2018]

 

சமீபத்தில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அதிமுகவினர் எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை தமிழக அமைச்சர் ஜெயகுமார், ரஜினிகாந்த் குறித்து பேசியபோது, 'திரைத்துறையில் ரஜினிகாந்த் சாதித்திருக்கலாம்; ஆனால் அரசியலில் அவர் கத்துக்குட்டிதான். அரசியல் குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்க தயார், ஆனால் அவர் கட்டணம் கட்டினால் மட்டும் போதும்' என்று கூறினார்.

அமைச்சர் ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்களும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் சமூக வலைத்தளத்தில் மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

பிக்பாஸ் தனது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் தகவல்

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அஜித்தின் அறிவியல் குழுவுக்கு அப்துல்கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சமீபத்தில் தல அஜித்தின் ஆலோசனையில் தக் ஷா என்ற மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்தது என்பதும்,

'செக்க சிவந்த வானம்': தியாகு கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே

அரசியல் கட்சியில் சேர ரூ.100 கோடி: பார்த்திபன் கூறும் அதிர்ச்சி தகவல்

ஒரு பிரபல அரசியல் கட்சி ஒன்று அந்த கட்சியில் சேர தன்னிடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் அந்த கட்சியில் சேர மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் பொதுக்கூட்டம்