தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். கவர்னர் பதவியை ஏற்க தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

தமிழக இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்து அவர் கூறியதாவது: இந்த அவசர சட்டம் தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே இந்த சட்டம் குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இவர் கூறியபடியே அவசர சட்டத்துக்கு மாற்றான சட்ட முன்வடிவு எதிர்வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொறுப்புடனும் அமைதியுடனும் போராடிய இளைஞர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மார்க்கண்டேய கட்ஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் பலர் ஜல்லிக்கட்டுக்கு தான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் தனது மனைவிக்கு உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தின் கவர்னராக மத்திய அரசு தன்னை நியமிக்கும் பட்சத்தில் அதை நிச்சயமாக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்ட இவரை போன்ற ஒருவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

பீட்டாவுக்கு தமிழக அரசு தடை. வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

டா என்ற அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை வெகுசிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பீட்டாவுக்கே தமிழக அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இளைஞர்கள் போராட்டம் வெற்றி. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு தலைவன் இல்லாத, தலைமை இல்லாத, தன்னலம் இல்லாத போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

த்ரிஷாவுக்கு பீட்டா தரப்பில் இருந்தும் நெருக்கடியா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்றும், அதன் உறுப்பினர் என்றும் கூறப்பட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் த்ரிஷா விளக்கம&

இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம். ஜனாதிபதியை சந்தித்த பின் தம்பித்துரை பேட்டி

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்ட வரைவு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நேற்றே அனுப்பி வைக்கப்பட்டத

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக...