தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். கவர்னர் பதவியை ஏற்க தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்து அவர் கூறியதாவது: இந்த அவசர சட்டம் தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே இந்த சட்டம் குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இவர் கூறியபடியே அவசர சட்டத்துக்கு மாற்றான சட்ட முன்வடிவு எதிர்வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொறுப்புடனும் அமைதியுடனும் போராடிய இளைஞர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மார்க்கண்டேய கட்ஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் பலர் ஜல்லிக்கட்டுக்கு தான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் தனது மனைவிக்கு உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் கவர்னராக மத்திய அரசு தன்னை நியமிக்கும் பட்சத்தில் அதை நிச்சயமாக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்ட இவரை போன்ற ஒருவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments