50% சம்பளத்தை குறைக்க தயார்: பிக்பாஸ் நடிகர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள் இதனால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத் தனது சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்து கொள்ள தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது
இன்று நமது சினிமா உலகம் இருக்கிற சூழ்நிலையில் சில நட்சத்திரங்கள் குறிப்பாக ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள முடிவு எடுத்துள்ளது ரொம்ப சந்தோசமாக உள்ளது. நானும் கடந்த பத்து வருடங்களாக திரைத்துறையில் இருக்கின்றேன். ஒரு சில படங்கள் நடித்து உள்ளேன். இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன்
இந்த கொரோனா பாதிப்பு நேரத்தில் நம்முடைய உழைப்பாளர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நம்முடைய படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகிஸ்தர்கள், திரையிடும் தியேட்டர் அதிபர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இவர்கள் 3 தரப்பினர்களும் சேர்ந்து ஒவ்வொரு நடிகருக்கும் இவ்வளவுதான் சம்பளம் என நிர்ணயம் செய்தால் அவர்கள் நிர்ணயம் செய்யும் சம்பளத்திற்கு நடிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய சம்பளத்தை அவர்கள் 50% குறைத்தாலும் சரி 70 சதவீதம் குறைந்தால் சரி எனக்கு சம்மதமே
என்னை போல் வளர்ந்து வரும் நடிகர்களும் இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். என்னைப்போல் ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய படங்கள் நடிக்க வேண்டும், நிறைய கேரக்டர்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும்’என்று நடிகர் மகத் கூறியுள்ளார்
"If producers decides am Ready to reduce as much as i can. If it s 50% also am ready to reduce frm my salary" Says actor @MahatOfficial @johnmediamanagr pic.twitter.com/i9UTD50QPL
— A. JOHN- PRO (@johnmediamanagr) May 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout